பாக்., முதலீட்டாளர் மாநாட்டில் ஆபாச நடனம்

பாக்,, சார்பில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பாக்.,ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாக்.,ன் நிதி பற்றாக்குறையானது 2018-19 ம் நிதியாண்டில் உச்சத்திற்கு சென்றுள்ளது. பாக்.,ன் பொருளாதார சூழலை கணக்கில் கொண்டு சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகள் பாக்.,க்கு நிதியுதவி அளித்து வருகின்றன. பாக்.,ல் எண்ணெய், எரிவாயு, மின்சாரம் என அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்காக பாக்., சார்பில் செப்.,4 முதல் 8 ம் தேதி வரை அஜர்பய்ஜனில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் நடன அழகிகளின் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர், ஆபாச நடனம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலானதால் நெட்டிசன்கள் பாக்., அரசை மிக கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ” நடன அழகிகளின் கவர்ச்சி நடனம் நடத்தி தான் முதலீடுகளை ஈர்க்க வேண்டி நிலையில் பாக்., உள்ளது” எனவும், மற்றொருவர், “இது தான் புதிய பாக்.,ல் முதலீடுகளை ஈர்க்கும் வழி. இதே போன்று ஆபாச நடனங்கள் நடத்தி எருமைகள், கழுதைகள், நாய்கள், பன்றிகளை விற்பதற்கும் மாநாடு நடத்தலாம்”என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா விண்ணில் ஏவிய சந்திரயான் 2 குறித்து பாக்., அமைச்சர் கேலி செய்து கருத்து பதிவிட்ட ஒருவர், “சந்திரயான் 2 வை கேலி செய்த பாக்., எருமைகள் இதை நன்றாக பார்க்கட்டும். முதலீடுகளை ஈர்ப்பதற்காக காட்டுவதற்கு பாக்., இடம் இது போன்ற ஆபாச நடனங்களை தவிர வேண்று ஒன்றும் இல்லை” என கருத்து பதிவிட்டுள்ளார்.