பாக்.கில் துவங்கியது ஓட்டு எண்ணிக்கை : இம்ரான் கட்சி முன்னிலை

பாகிஸ்தானில், இன்று நடந்து முடிந்த பொதுதேர்தலில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ- இன்சாப் கட்சி முன்னிலை வகிப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

பாகிஸ்தானில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல், இன்று காலை துவங்கி நடந்து முடிந்தது. நாடு முழவதும். 85 ஆயிரம் ஓட்டுப் பதிவு மையங்களில், மக்கள் ஓட்டளித்தனர்.இத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

பாக்.பார்லி.யில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 60 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு10 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது .ஓட்டுப் பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

மொத்தமுள்ள 272 இடங்களில் இம்ரானின் கட்சி 62இடங்களிலும், நவாஸ் கட்சி43இடங்களிலும், பெனாசிர் பூட்டோ கட்சி 26 இடங்களிலும் மற்றவை 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

24 மணி நேரத்திற்குள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என பாக். தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.