பாக்கிஸ்தான் மீது ஈரான் சர்ஜிக்கல் தாக்குதல் !!

பாகிஸ்தானில் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்த தங்கள் நாட்டு வீரர்களை, ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி மீட்டுள்ளது.

பாகிஸ்தான் ஈரான் எல்லையோரம் உள்ள சிஸ்தான் பகுதியில் இருந்து ஜெய்ஷ் அல் அதல் எனும் பயங்கரவாத குழு 11 ஈரானிய வீரர்களை கடந்த 2018ம் ஆண்டு கடத்தியது. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரில் 5 பேரை 2018ல் விடுவித்தது. பின்னர் 2019ல் 4 பேரை விடுதலை செய்த பாகிஸ்தான், மீதமுள்ள 2 பேரை விடுவிக்காமல் தாமதித்தது.

அதுமட்டுமல்லாமல், 2019 பிப்ரவரியில் ஈரான் துணை ராணுவத்தினர் வந்த பேருந்து மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் முகாம் மீது கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி, இரண்டரை ஆண்டுகளாக பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கள் நாட்டு வீரர்களை மீட்டுள்ளதாக ஈரான் படைகள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய மூன்றாவது நாடு ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.