- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது !!
கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் பொதுமுடக்கம், வெளிநாட்டு பயணிகள் கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சில நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்கி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் ; கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தான், துருக்கி, ஈரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.