- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நியூ மீர்பூர் பகுதியருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இதனால் நாட்டின் வடபகுதியில் பல்வேறு நகரங்கள் குலுங்கின. சில வீடுகள் இடிந்து விழுந்தன. அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்தது.
இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மருத்துவமனைகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பல வாகனங்கள் சாலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குள் விழுந்தன. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அச்ச உணர்வால் கட்டிடத்தில் இருந்து பொதுமக்கள் தப்பியோடினர். ஜீலம் கால்வாய் சேதமடைந்து உள்ளது. அதில் இருந்து நீரானது பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்துள்ளது.
இந்நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகி உள்ளனர். 300 பேர் காயமடைந்து உள்ளனர். உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என தேசிய பேரிடர் மேலாண் கழக தலைவர் முகமது