பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை

பாகிஸ்தானில், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை நிகழ்த்தப்படுவதாக, அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

‘சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில், ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது தொடர்கிறது. பஞ்சாபில், 14 வயது பெண்களை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, திருமணம் செய்விக்கப்படுகிறது.

அஹமதியா சிறுபான்மை சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் மீது, மத துவேஷ வழக்கு தொடரப்படுகிறது’ என, மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.