பாகிஸ்தானில் அதிவேகமாகப் பரவி வரும் கொடிய எய்ட்ஸ் நோய் குறித்து அதிர்ச்சி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஷாஹ்கோட் நகரில் எச்ஐவி அல்லது எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாகப் பரவி வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நகரில் ஒரே ஆண்டில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை எதிர்பாராத வகையில் 140 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சட்ட அமலாக்கத் துறை திரட்டிய தகவல்கள் பஞ்சாப் மாகாண அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 85 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆசியாவிலேயே எய்ட்ஸ் வேகமாகப் பரவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், 2017ல் மட்டும் அங்கு 20 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.