பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டாவில், சாகஸ் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தன், 16வது பிறந்த நாளை, நேற்று முன்தினம் கொண்டாடினார்.
பள்ளிக்கு கறுப்பு ஆடையில் வந்த அந்த சிறுவன், திடீரென தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, சரமாரியாகசுட்டார்.இதில், 16 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் மூன்று பேர், காயமடைந்தனர்.