பரபரப்பாகும் ரவிராஜ் கொலை வழக்கு..! விரைவில் கைதாக போகும் கருணா

கருணா தரப்பினரின் கோரிக்கைக்கு அமையவேமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்கொலை சம்பவத்தில் தாம் பங்கேற்றதாக நீதிமன்றில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்புமேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, அரச தரப்பு சாட்சியாக பொலிஸ் அதிகாரியான பீரிதிவிராஜ் மனம்பேரிஎன்ற சந்தேகநபர் நீதிமன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த கொலை வழக்கின் சாட்சியாளர் மற்றும் பிரதிவாதிகள்மூவருக்கும் சிறைச்சாலைக்குள் விசேட பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவின் சாரதியாகப் பணியாற்றிய பிரித்திவிராஜ் மனம்பேரி என்ற நபர், எந்தவொருவெளித்தொடர்புகளைப் பேணுவதற்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம்வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலரைகொலை செய்வதற்காக கிரித்தலை இராணுவ முகாமில் இருந்து ஆயுதம்விநியோகிக்கப்பட்டிருந்தது.

பிரதி மன்றாடியார் நாயகம் ரொஹான் அபயசூரிய கடந்த வழக்கு விசாரணையின்போது ஆயுதம் வழங்கப்பட்டதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதிக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.