பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை பீர் தாரிக் – மகள் இன்ஷா கைது

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அடில் அகமது தர் என்பது பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்.,28 ல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் காடுத்த ஷாகீர் பசீர் என்பவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடந்தது.