பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம் அதிரடியில் இறங்கியது இலங்கை அரசு

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை, பயங்கரவாதிகள், சொத்து

கிறிஸ்துவர்களின் பண்டிகையான, ‘ஈஸ்டர்’ அன்று, இலங்கையில் உள்ள

மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது.இதில், 253 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உள்ளூர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒன்பது பேர், இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.பயங்கரவாதிகள் ஒன்பது பேர் மற்றும் அவரது உறவினர்களின் விபரங்களை, போலீசார் சமீபத்தில் வெளியிட்டனர்.

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களின் பட்டியலை, விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர்.அந்த சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும்வரை, இலங்கையில் உள்ள அனைத்து தேவால யங்களிலும், ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கிறிஸ்துவ அமைப்புகள் அறிவித்துள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி, இன்று முதல் 5 வரை, மூன்று நாட்கள், அரசு முறை பயணமாக, இலங்கை வருவதாக இருந்தது. ஆனால், அங்கு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. மறு தேதி பின்னர்அறிவிக்கப்படும் என, துாதரக அதிகாரிகள்தெரிவித்தனர்.