பட்டையைக் கிளப்பும் பைரவா! – விஜய்

தெறி படம் ஹிட்டடித்ததை அடுத்து இப்போது பரதன் இயக்கியுள்ள பைரவா படத்தில் டபுள் ரோலில் நடித்துள்ளார் விஜய்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்கு முன்பு பரதன் இயக்கத்தில் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தபோதும் கெட்டப்பில் பெரிய வித்தியாசம் காட்டாத விஜய், இந்த படத்தில் நகரம், கிராமம் என இரண்டு கெட்டப்புகளில் நடித் துள்ளார். முக்கியமாக, சிட்டி சப்ஜெக்டுகளில் விஜய்யை அதிகமாக பார்த்து விட்ட நிலையில், கிராமத்து கெட்டப்பில் அவர் நடித்திருப்பது மிக வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளதாம். அவரும் அந்த வேடத்தில் அதிக என்சாய் பண்ணி நடித்துள்ளாராம்.

இந்நிலையில், சமீபத்தில் பைரவா படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டி ருக்கிறது. இதற்கிடையே, தற்போது எடிட்டிங் பணிகள் நடந்துள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு படத்தை பார்த்துள்ளார் விஜய். அப்போது காட்சிகள் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்ததால் சந்தோசமடைந்த விஜய், பைரவா பட்டிதொட்டியெல்லாம் பட்டையக் கிளப்பும் -என்று சொன்னாராம். விஜய்யின் இந்த வார்த்தையினால் டோட்டல் பைரவா டீமே உற்சாகத்தில் காணப்படுகிறது