பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது

உதயன் பல்சுவைக் கலைவிழா 2017 கடந்த சனிக்கிழமை கனடா நாட்டின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது.
கனடா வாழ் பேச்சாளர்கள் திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், டாக்டர் போல் ஜோசப், கவிஞர் புகாரி மற்றும் திருமதி கோதை அமுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பட்டிமன்றத்தை சபையில் அமர்ந்திருந்த அனைவரும் இறுதவரை அமர்ந்திருந்து ரசித்தனர்.
நட்சத்திரா இசைக்குழுவினர் சிறந்த இசைநிகழ்ச்சியை வழங்கினர். நடனம் மறறும் சிறப்புக் கௌரவிப்பு ஆகியன இடம்பெற்றன.
இந்த விழாவை சிறப்பாகவும் அழகுறவும் நடத்த ஆதரவு வழங்கிய வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் மேடையில் கௌரவிககபபட்டனர்.
கனடா உதயனின் கடந்த 21 ஆண்டு பயணத்திலும் ஏற்பாடு செய்த முன்னைய விழாக்களிலும் இவ்வருட விழா சிறப்புப் பெற்றததாக விளங்கியது என்பது உண்மையே.
எமது உதயன் பல்சுவைக் கலைவிழா-2017 சிறப்புறவும் அழகுறவும் நடைபெற காரணமாக இருந்த வர்த்தகப் பெருந்தகைகள் மற்றும் நண்பர்கள், குறிப்பாக சங்கர் நல்லதம்பி, விமல் நவரட்ணம், பெபியன் கபே அதிபர் பாஸ்கரன், சோதி செல்லா, பிரபா(கிறபிக் கலைஞர்) பிரபு (அலுவலக நிர்வாகி) வள்ளிக்கண்ணன் மருதப்பன், தேவதாஸ் ( TImes Iron Works Inc ) அம்மா நகை அடைவு மாடம் திரு கோபால், மற்றும் திருமதி இந்திரா ஜெயானந்தன், கிருபா கிசான், வர்த்தக நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றி! நன்றி
அடுத்த நாள் மொன்றியால் நகரில் நடைபெற்ற விழாவும் சிறப்பாகவும் நிறைவாகவும் அமைந்தது
மேலதிக புகைப்படங்களை உதயன் பத்திரிகையில் பார்க்கலாம்.