படுகொலை செய்யப்பட்ட 17 வயது இளைஞரின் ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்த தாயார்

லண்டனில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட 17 வயது இளைஞரின் ரத்தக்கறைகளை சம்பவப் பகுதியில் இருந்து அவரது தாயார் கழுவி சுத்தம் செய்துள்ளார்.
பிரிட்டனா மோர்கன் என்பவரின் 17 வயது மகன் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள கென்னிங்டன் நகரில் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தமது அண்டை வீட்டார் பெண் ஒருவருடன் சம்பவப்பகுதிக்கு சென்ற மோர்கன் இளைஞர் பார்டனின் ரத்தம் சிந்திய பகுதியை தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்துள்ளார்.
இளைஞரின் ரத்தக்கறையானது கடந்த இரு தினங்களாக சுத்தம் செய்யாமலே அப்பகுதியில் கிடந்துள்ளது. நெஞ்சை உலுக்கிய நொடிகள் என்ற தலைப்பில் தற்போது அந்த  வீடியோ  வெளியாகியுள்ளது.லண்டனில் இந்த ஆண்டு பிறந்தது முதல் இது 63வது படுகொலையாகும். அது மட்டுமின்றி பல இளைஞர்கள் கொலை முயற்சியில் இருந்து காயங்களுடன் தப்பியும் உள்ளனர். கடும் துயரத்தினிடையே   கண்ணீருடன்  லண்டனில் தொடரும் மர்ம நபர்களின் தாக்குதலுக்கு பறிபோகும் கடைசி உயிர் எனது மகனுடையதாக இருக்கட்டும் என்பதே.