பங்களாதேஷ்: இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் 1 லட்சம் பேர்

பங்களாதேஷில் கொரோனா பரவி வரும் சூழலில் இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.

பங்களாதேஷில் இதுவரை 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 101 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா சமூக பரவல் ஆகாமல் இருக்க 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் அரசு உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் உள்ள மதபோதகர் மவுலானா சுபாயர் அஹமத் அன்சாரியின் இறுதிச்சடங்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்

latest tamil news

ஊர்வலத்தில் திரண்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.