பக்தர்கள் போராட்டம் : 144 தடை உத்தரவு

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக புதனன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சபரிமலை பகுதியில் போராட்டக்களத்தைச் சேர்ந்த பெண்கள், சபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இளம் வயது பெண்களை தடுத்து நிறுத்துவதற்காக நிலக்கல், பம்பை, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்கார்கள் குவிந்துள்ளனர். பெண் பக்தர்கள் யாரும் தடுத்து நிறுத்தப் படமாட்டார்கள் என போலீசார் கூறி இருந்தனர். பம்பை அருகே மகளிர் காவல்நிலையம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலைக்கு வந்த 45 வயது பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர். செய்தி சேகரிக்க வந்த இளவயது பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் அனுப்பப்பட்டனர். பம்பையில் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் இருந்து மீண்ட பெண் பக்தர்கள் சிலர், போலீசாரின் கடும் பாதுகாப்பு வளையத்திற்கு இடையே சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆந்திராவை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண்ணின் குடும்பம் எதிர்ப்பை மீறி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். ஆயிரக்கணக்கான கேரள ஆதிவாசி மக்கள் சபரிமலைக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும், பெண்கள் நுழையாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.

பக்தர்கள் போராட்டம் காரணமாக நிலக்கல், பம்மை, சன்னிதானம் உள்ளிட்ட 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது, இன்று இரவு முதல் அமலுக்கு வர உள்ளது.

சபரிமலை வரும் பெண் பக்தர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் டிஜிபிக்கு பெண்கள் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

 

முன்னதாக, பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலைக்கு வந்த 45 வயது பெண் பக்தர் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். செய்தி சேகரிக்க வந்த இளவயது பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பம்பையில் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டு, பெண் பக்தர்கள் சிலர், போலீசாரின் கடும் பாதுகாப்பு வளையத்திற்கு இடையே சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆந்திராவை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண்ணின் குடும்பம் எதிர்ப்பை மீறி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில், சபரிமலைக்கு போகாதீங்க என பக்தர்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். இதையும் ஒரு போராட்டமாகவே செய்தனர்.

பம்பை அருகே செய்தி சேகரிக்க சென்ற 5 பெண் பத்திரிககையாளர்களை தாக்க முயற்சி நடந்தது. அவர்கள் வந்த வாகனங்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

சபரிமலையில் நிலக்கல் பகுதியில் போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தடியடி நடத்திய போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.