நேற்று புதன்கிழமை 18ம் திகதி மாலை ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நடைபெற்றது.

கனடிய தமிழர் சமூகத்தின பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வர்த்தகப் பிரமுகர்களும் அரசியல் ஆர்வலர்களும் அங்கு கலந்து கொண்டனர்.

முக்கியமாக தற்போது இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள வடக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா, சுகாதார அமைச்சர் திரு சத்தியலிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் திரு தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

முதல்வர் கெத்தலின் வின் அவர்கள் கனடா உதயன் பிரதம ஆசிரியர் வழங்கிய கனடா உதயன் பிரதியொன்றை மிகுந்த ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டார். அதில் முன்பக்கத்தில் கடந்த வாரம் அவர் குயின்பார்க்கில் சந்தித்த வடக்:கு ◌மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் காணப்பட்டது.

மேலும் பிரபல வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் அவர்கள் தன்னோடு அழைத்து வந்த பிரபல தென்னிந்திய நடிகர் விசால் அவர்களின் தந்தை திரு ரெட்டி மற்றும் விசாலின் சகோதரி ஆகியோரையும் திரு கணேசன் சுகுமார் ஒன்றாரியோ முதல்வருககு அறிமுகம் செய்து வைத்தார்.