
நெற்றியில் திருநீறு வைப்பதற்கு எதிராக பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா?
இணையத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவர் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சித்தான் திமுக என்றும் பாஜகவின் தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் திமுகவையும், அக்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக சாடியுள்ளார்.
அண்மையில், தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @BJP4TamilNadu
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) 2 நவம்பர், 2019
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @BJP4TamilNadu
தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி #bjpinsultsthiruvalluvar என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிந்து வந்தனர்.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @MuhammadAarif_7
இப்டி இருந்த திருவள்ளுவர, பட்டை, குங்குமம், காவி ட்ரெஸ்லாம், போட்டு என்னடா பண்ணி வச்சிருக்கீங்க ?#BJPInsultsThiruvalluvar pic.twitter.com/kFbN0ENQwV
— இனியவன் ? (@MuhammadAarif_7) 3 நவம்பர், 2019
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @MuhammadAarif_7
அதேசமயம், திருவள்ளுவரையும், திருக்குறளையும் இந்து மதத்தோடு தொடர்புப்படுத்தி பாஜக ஆதரவாளர்கள் கருத்து பதிந்தனர்.
காவி உடையில் திருவள்ளுவர்: பாஜக பதிவுக்கு எதிராக டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் விவாதம்
இந்த சூழலில்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கடுமையாக சாடி கருத்து தெரிவித்திருந்தார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!” என்று பாஜகவை தாக்கி இருந்தார்.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @mafoikprajan
வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த தியான உருவம் சமணத்துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை!#திருவள்ளுவர்
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @mafoikprajan
ஸ்டாலின் இந்த கருத்துக்குத்தான் பாஜகவின் தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
“நெற்றியில் திருநீறு வைப்பதற்கு எதிராக பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா?”
திருவள்ளுவர் ஒரு புனிதர் அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்ல என்று கூறிய முரளிதர் ராவ், ஒட்டுமொத்த மனித குலத்துக்கே பொருந்தும் வாழ்வியல் நெறியோடு வாழ்ந்தவர் என்றும், அவரை குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முயல்வதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PMuralidharRao
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PMuralidharRao
மேலும், ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு திமுக எப்போதும் துரோகம் இழைத்துள்ளது என்று சாடிய அவர், நெற்றியில் திருநீறு வைப்பவர்களை தமிழர்கள் அல்லாதவர் என்று ஸ்டாலினால் வெளிப்படையாக சொல்ல முடியுமா சவால் விடுத்தார்.
“அப்படி ஒருவேளை அவர் சொன்னால் தமிழர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்,” என்று முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
முரளிதர் ராவ்வின் கருத்துக்கு இதுவரை திமுக தரப்பிலிருந்து எந்த பதிலடியும் தரப்படவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருவள்ளுவருக்கு பதிலாக பெரியார் என்று கூறியது சமூக ஊடங்களில் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருந்தது.