நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர்

ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதிவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மூர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67.

நாட்டில் ஜனநாயக முறையில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூர்சி, பதவியிலிருந்து இறக்கப்பட்ட ஒரு வருடக் காலத்திற்கு போராட்டங்கள் நடைபெற்றன.

அதிலிருந்து அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.