நீதிபதிகள் விடுக்கும் உத்தரவுகள் நியாமற்ற இனவாத எதிர்ப்புக்களிடம் தோற்றுப் போகின்றன!!

இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமல்ல, முழு இலங்கைத் தீவிலுமே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு மேலாக இராணுவம் மற்றும் போலீஸ் படைகளும் தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லுவதற்கு எப்போதும் தயங்குவதில்லை..

இவ்வாறு கடந்த காலங்களில் ஆயிரக்கணக்காக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படடபோது தமிழ்ப் பிரதேசங்களில் நீதிபதிகளாக பணியாற்றிய தமிழ் பேசும் கனவான்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பொலிஸாரையோ அன்றி இராணுவத்தினரையோ அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்று கைது செய்துவருமாறு பொலிசாருக்கு பணிப்புரைகள் வழங்கவது வழக்கம்.

ஆனால் அந்த உத்தரவுகள் எதுவுமே இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என்புத கண்கூடான விடயமே.

இதற்கு முன்னர் பல தடவைகளில், நீதிபதிகள் பலர் உத்தரவுகளைப் பிரப்பித்தும் எவருமே கைது செய்யப்படவ்pல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. இதைப் போலவே யாழ். மல்லாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர் புடைய பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், நேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது இச் சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் விசாரணைகளை மேற் கொண்ட நீதிபதி, துப்பாக்கிச் சூட்டை நடத் திய சுன்னாகம் போலீஸ் உத்தியோகத்தரை கைது செய்ய உத்தரவிட்டார்.
ஆனால் இவ்வாறான உத்தரவுகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றதோ என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்