நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்

ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நிரவ் மோடி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக முடியாது என இ.மெயில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

நிரவ் மோடியின் மோசடி பற்றி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் ஒரு நடவடிக்கையாக, நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்கள், கடைகள், அலுவலகங்களில், அமலாக்கத் துறை மற்றும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, சொத்துகளை கைப்பற்றி வருகின்றனர்.’மியூச்சுவல் பண்டு’ மற்றும் நிறுவன பங்குகளில், நிரவ் மோடியும், சோக்சியும் முதலீடு செய்திருந்த, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. அத்துடன், நிரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான, ஒன்பது சொகுசு கார்களும், பறிமுதல் செய்யப்பட்டன. ‘கீதாஞ்சலி’ குழுமத்திற்கு சொந்தமான, 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.