- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்
பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில், நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரி நிரவ் மோடியும் அவர் உறவினர், மெஹுல் சோக்சியும், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது, சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து, இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். நிரவ் மோடி பிரிட்டனில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் மும்பை நீதிமன்றம், நிரவ் மோடிக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.