நியூயார்க் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து – ஐவர் காயம்

வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக யூத பொது விவகாரங்களுக்கான சபை (OJPAC) கூறுகிறது.

சந்தேக நபர் அங்கிருந்து தப்பியதாகவும், ஆனால் காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

நகரத்தில், யூத எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நிலவுவதால், யூத மக்கள் வாழும் பல பகுதிகளில், காவல் துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நகரய யூதர்கள் அதிகம் வசிக்கும் மோன்சியில் ஒரு மத குருவின் இல்லத்தில், ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது முக மூடி அணிந்த நபர் தாக்குதல் நடத்தினார்.

யூத மத குருவின் வீட்டில் கத்தி குத்து தாக்குதல்படத்தின் காப்புரிமைREUTERS

தாக்குதலின்போது, அங்கிருந்த மக்கள் அருகில் இருந்த யூத வழிப்பாட்டு தளத்திற்கு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர், ஆனால் வழிப்பாட்டு தளத்தில் இருந்தவர்கள் தாக்குதல்தாரிகளுக்கு பயந்து உள்பக்கம் கதவை பூட்டி கொண்டனர். எனவே தப்பி செல்ல வழி இல்லை என சம்பவ இடத்தில் இருந்த கோன் கூறுகிறார்.

தாக்குதல் நடத்தியவர் ஒருவர், காரில் ஏறி தப்பி சென்றதாகவும், அந்த காரின் நம்பர் பிளேட்டை சிலர் பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் அந்த நம்பர் பிளேட்டை வைத்து வாகனத்தை கண்டறிந்து சந்தேக நபரை கைது செய்ததாக கூறுகின்றனர்.

நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, நடந்த தாக்குதல் ஒரு வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான செயல் என்று கூறினார்.

யுத மதத்திற்கு எதிரான மற்றும் பன்முகத்தன்மைக்கு களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் நங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

யூத மத குருவின் வீட்டில் கத்தி குத்து தாக்குதல்

நியூயார்க் அட்டார்னி ஜெனரலான லெடிடியா ஜேம்ஸ், இந்த சூழ்நிலையால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறினார். மேலும் இவ்வாறான வெறுக்கத்தக்க செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தன் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

நியூயார்க் காவல்துறையினரின் பயங்கரவாத தடுப்பு பிரிவு துறை, தாக்குதல் குறித்து வெளியாகும் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறுகிறார்.

இந்த தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் , இது கண்டனத்துக்கு உரியது என்றும் இஸ்ரேல் பிரதமர் ருவென் ரிவ்லின் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், யூத இனத்திற்கு எதிரான வன்முறை என்பது யூதர்கள் அல்லது இஸ்ரேலியர்களின் பிரச்னை மட்டுமல்ல. உலகம் முழுவதும் நிலவும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும், இவ்வாறான தாக்குதல்களை இனி நடத்த விடமாட்டோம் என்றும் கூறினார்.