- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது

நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
நியூசிலாந்தில் நடந்த எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டின் எம்.பி.,யாக தேர்வாகியுள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
நியூசிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கவுரவ் சர்மா அந்நாட்டின் மேற்கு ஹாமில்டன் தொகுதியில் எம்.பி., யாக வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த புதனன்று அந்நாட்டு பார்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் எம்.பி., டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 33 வயது நிரம்பிய சர்மா நாவ்டானில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் தனது முகநூல் பதிவில், ‛நான் சமஸ்கிருதத்தை ஆரம்பம் மற்றும் இடைநிலை பள்ளிப்பருவத்திலிருந்து கற்று வருகிறேன். சமஸ்கிருதம் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிலிருந்து தான் எல்லா இந்திய மொழிகளும் தோன்றின’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் நடந்த பதவிப் பிரமான நிகழ்ச்சியின் போது சமஸ்கிருத மொழியை பயன்படுத்திய இரண்டாவது நபர் கவுரவ் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.