நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

பல்வேறு புகார்களை அடுத்து சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். ஆனாலும் அவர், சமூக வலைதளம் மூலம் பக்தர்களுக்கு சமூக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளை கேலி செய்யும் அவர், கைலாசா என்ற நாட்டை அமைக்க போவதாக கூறி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் நித்யானந்தா ஆற்றிய சொற்பொழிவில் கூறியதாவது: கடந்த 2003 ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். ஆன்மிக துறையில் என்றோ நான் தலைவனாகிவிட்டேன். கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், கைலாசாவை அமைத்தே தீருவேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.