நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிரடி பட்ஜெட்டில் திருக்குறள் !!

நடப்பு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். இது நிர்மலாவின் தமிழ் ஆர்வத்தை காட்டுவதாக பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லியில் இன்று (பிப்.1) தாக்கல் செய்து உரையாற்றினார். சென்ற ஆண்டு பட்ஜெட் உரையின் இடையே திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியது அனைவரும் பாராட்டினர். கடந்த பட்ஜெட்டில்,
‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து’ – என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். ‛நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு,’ என்பதே இதன் விளக்கமாகும். அவரின் தமிழ் ஆர்வம் இந்த நிதியாண்டு பட்ஜெட்டிலும் வெளிப்பட்டுள்ளது.

latest tamil news

நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டிலும் ‛பிணியின்மை’ திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதுமட்டுமல்லாமல், கூடுதலாக மேலும் ஒரு திருக்குறளையும் சுட்டிக்காட்டினார்.
‛இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு’

 

இதன் விளக்கம்:

பொருள்; வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களை சேர்த்தலும் காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலுமே சிறந்த அரசன்.