நிக்கி கல்ராணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை!

டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்த நிக்கி கல்ராணி, அந்தபடத்தில் பேய் வேடத்தில் நடித்து மிரட்டினார். அதையடுத்து,

யாகவராயினும் நாகாக்க, கோ-2, வேலையின்னுவந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாருஆகிய படங்களில் நடித்தவர், தற்போது லாரன்ஸ்நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில்நடித்திருக்கிறார். அப்படம் இம்மாதம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படம் குறித்து கோலிவுட்நண்பர்களிடத்தில் தான் பெரிய எதிர்பார்ப்புவைத்திருப்பதாக கூறி வருகிறார் நிக்கி கல்ராணி.

அதாவது, இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் இளசுகளை கவரும்வகையிலான கிளுகிளுப்பான பர்பாமென்ஸ் நிறையவே கொடுத்திருக்கிறேன். முக்கியமாக, நடனத்தில் இதுவரையில்லாத வகையில் புயலாக ஆடியிருக்கிறேன். அதற்கு காரணம் லாரன்ஸ்தான். அவர்தான் நானே எதிர்பார்க்காத அளவுக்கு என்னைநடனமாட வைத்தார். விளைவு, இனிமேல் எந்தமாதிரியான நடனங்களையும் என்னால்ஆட முடியும் என்கிற நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறது என்கிறாராம்.