நாவற்குழியில் சுவாசக்குழாயினுள் கச்சான் வித்து சிக்கி இரண்டரை வயது குழந்தை பலி

கச்சான் வித்து சுவாசக் குழாயில் சிக்கியதில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய நியூமார் கானகன் என்ற குழந்தையே மேற்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடந்த 3-ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு குறித்த குழந்தைக்கு தந்தையார் கச்சான் கோதினை உடைத்து வித்தை உண்பதற்கு கொடுத்துள்ளார். குழந்தை கச்சான் வித்தை உண்டதும், புரைக்கேறி குழந்தை மயக்கமடைந்தது. உடனடியாக குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் காலை உயிரிழந்துள்ளது. இந்த மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண விசாரணை அதிகாரி இ.இளங்கீரன் மேற்கொண்டிரு ந்தார்.