நான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி – சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பலரையும் வம்புக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களையும் சீண்டியுள்ளார்.

நாங்குநேரி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பலரையும் வம்புக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களையும் சீண்டியுள்ளார்.

நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வரும் அக்., 21ல் நடக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். சீமான் பேசுகையில், என்னை எதிர்க்கிறவன் எல்லாம் என் எதிரி அல்ல, நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என் எதிரி. நான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி. அந்த பன்றிகளின் மீது இருக்கும் உன்னிகளை வேட்டையாட வந்தவன் அல்ல.

இப்போது எல்லாம் வடமாநிலத்தவர்கள் தான் தமிழகத்தின் பெரும்பாலான வேலைகளில் பணி அமர்த்தப்படுகின்றனர். ஆனால், என் தலடா, என் தளபதிடா என நீங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியே தலயா தளபதியா என சண்டை போட்டே மண்டையை போடப்போகிறீர்கள்.  நான் மெயின் ரவுடிகளிடம் மோதிக் கொண்டிருக்கிறேன். அல்லக்கைகள் குறுக்கே வரக்கூடாது. இவ்வாறு சீமான் பேசினார்.

சீமானின் இந்த சர்ச்சை பேச்சு, அஜித், விஜய் ரசிகர்களிடம் சமூக உணர்வு இல்லாதது போலவும், அவர்கள் சமூக பிரச்னைகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பது போலவும் இவருக்கு மட்டுமே அவை இருப்பது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.  இதனால் ரசிகர்களின் ‘சிறப்பு அர்ச்சனையில்’ சீமான் சிக்கியுள்ளார்.