- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

நாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து
கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இன்று அவர் நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஹெகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி அவரது கையை குழுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் என பலர் கலந்துக் கொண்டு உள்ளனர்.