நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!

‘விருப்பமனு கொடுப்போர், தங்கள் மீதான குற்ற வழக்குகள் சார்ந்த விபரங்களையும் நேர்காணலின் போது தெரிவிக்க வேண்டும்’ என, அறிவாலயம் தெரிவித்திருந்தது.

இதனால், குற்ற வழக்குகளில் சிக்காதவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என, உ.பி.,க்கள் நம்புகின்றனர். எனினும், பலர், முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, பல்வேறு மாவட்டங்களில், நிலம், சொத்து அபகரிப்பு, ரவுடியிசம் போன்றவற்றில் சிக்கிய வழக்கு விபரங்களை நேர்காணலில் தெரிவிக்காமல், மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொதுமக்களின் நிலம், சொத்துக்களை அபகரித்த, கட்சி நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களால் தான், தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. தி.மு.க.,வினர் அபகரித்த சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவே, ஜெயலலிதா மாவட்ட வாரியாக நில அபகரிப்பு குற்றத்தடுப்பு பிரிவு ஏற்படுத்தினார்.

விருப்பமனு கொடுப்போர், தங்கள் மீதான குற்ற வழக்குகள் சார்ந்த விபரங்களையும் நேர்காணலின்போது தெரிவிக்க வேண்டும்’ என, அறிவாலயம் தெரிவித்திருந்தது. இதனால், குற்ற வழக்குகளில் சிக்காதவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என, உ.பி.,க்கள் நம்புகின்றனர். எனினும், பலர், முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, பல்வேறு மாவட்டங்களில், நிலம், சொத்து அபகரிப்பு, ரவுடியிசம் போன்றவற்றில் சிக்கிய வழக்கு விபரங்களை நேர்காணலில் தெரிவிக்காமல், மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நில அபகரிப்பு, ரவுடியிசம் என்றாலே, தி.மு.க., தான் என நிலவும் கெட்ட பெயரை நீக்க, ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நிலம், சொத்து அபகரிப்பு, ரவுடித்தனத்தில் கட்சியினர் ஈடுபட மாட்டார்கள். ‘அப்படி ஈடுபடுவோர், அமைச்சராக இருந்தாலும், கட்சியில் இருந்து துாக்கி எறிவதோடு, பதவியும் பறிக்கப்படும்’ என, ஸ்டாலின் உறுதி தருவார் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

‘மாறாக, அ.தி.மு.க., அரசின் ஊழல்கள் பற்றி மட்டும், தளபதி பேசி வருகிறார். ஊழலை விட, ரவுடியிசம் ஆபத்தானது என மக்கள் நினைப்பது தலைமைக்கு தெரியவில்லை. ‘அப்புறம் எப்படி, தி.மு.க., மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்?’ என, தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விஷயம், தேர்தல் ஆலோசனை குழு வாயிலாக, ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளது. எனவே, தேர்தல் அறிக்கையில் இதை வாக்குறுதியாக அறிவிப்பார் என்ற, ஒரு எதிர்பார்ப்பு பிறந்துள்ளது.