“நாங்கள் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காவே தற்போதைய அரசுக்கு ஆதரவை வழங்குகின்றோம்”

கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜா

“நாங்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களைத் கடந்த காலங்களில் தவற விட்டுள்ளோம். இப்போது எமது இனத்தின் விடிவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்” இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ததேகூ(கனடா) நடத்திய இரவு விருந்தின் போது முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறிஸ்கந்தராசாஈ தனது உரையில் குறிப்பிட்டார். தலைமை உரையை ததேகூ (கனடா) இன் தலைவர் கதிர வேலுகுகதாசன் ஆற்றினார்.

வரவேற்புரையை ததேகூ இன் துணைத்தலைவர் வீர சுப்பிர மணியம் ஆற்றினார். மிகச் சிறப்பாக நடந்தேறிய இந்த விருந்தில் நா.உறுப்பினர்கள் கோடீஸ்வரன் அரிய நாயகம் (அம்பாறை சிறிநேசன் ஞான முத்து (மட்டக்களப்பு) வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குரு குலராசா, வட மாகாண நல்வாழ்வு அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிங்கார வேல் தண்டாயுதபாணி, வட மாகாண சபை உறுப்பினர்கள் இமானு வேல் ஆனல்ட், ஜனாப் அயூப் அஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்கள் “கனேடியத் தமிழர் பேரவை அமைப்பானது, இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் கல்வி, சுகாதாரம்,கொருண்மியம் ஆகிய துறைகளில் எவ்வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் அதற்கான வழிவகைகள் என்ன என்பதை ஆராய ரொறன்ரோ நகரில் சென்ற சனவரி 15, 16, 17 நாட்களில் வடகிழக்கு மீள்கட்டமைப்பு மகாநாட்டினை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளார்கள். அவர்களின் முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இங்குள்ள குளிர் கால நிலையிலும் நீங்கள் கடுமையாகப் பாடுபட்டு உழைத்து வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன். பலர் இரண்டு வேலைகளையும் செய்து வருகின்றீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் காட்டிவரும் ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
கனடா தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரமுகர் திரு நக்கீரன் பேசும் போது ” போர் முடிந்த பின்னர் ஓகஸ்ட் 2009 இல் யாழ்ப்பாண மாநகர சபை,வவுனியா மாநகர சபை ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற்ற காலப் பகுதியில்தான் ததேகூ (கனடா) தோற்றம் பெற்றது. ததேகூ பலத்த இடர்ப்பாடுகள் மத்தியில் தேர்தலை சந்தித்த சூழ்நிலையில் தேர்தல் செலவுக்காக ரூபா 18 இலட்சம் அளவில் திரட்டி அனுப்பி வைத்தோம். அதனைத் தொடர்ந்து ஏப்ரில் 2010 இல் நாடாளுமன்றத்துக்கு நடந்தபொதுத் தேர்தலின் போது பெருந்தொகை நிதியை திரட்டி அனுப்பினோம். பின்னர் 2011 இல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நிதி சேகரித்து அனுப்பினோம். இந்தத் தேர்தலில் ததேகூ 32 உள்ளாட்சி மன்றங்களில் வெற்றி பெற்றது. 274 ததேகூ உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இதன் பின்னர் 2012 இல் கிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தலின் போதும் நிதி கொடுத்தோம். இந்தத் தேர்தலில் மொத்தம் 37 இருக்கைகளில் 11 இருக்கைகளில் ததேகூ வெற்றிபெற்றது. புலம்பெயர் அமைப்புக்கள் சில ததேகூ வீழ்த்த கஜேந்திர குமாரின் அகில இலங்கை காங்கிரசுக்கு பெருந்தொகை பணம் கொடுத்து உதவின. ஆதரித்து அறிக்கைகள் விட்டன. இருந்தும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட எல்லாத் தேர்தல் மாவட்டங்களிலும் கட்டுக்காசை இழந்தது. ததேகூ 14 தொகுதிகளில் வென்றது. இப்படிச் சொல்வதால் ததேகூ(கனடா) தேர்தல் நிதி சேகரிப்பில் மட்டும் அக்கறை காட்டிய அமைப்பு என்று யாரும் நினைத்து விடக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த பெருந்தொகை பணம் சேகரித்து அனுப்பினோம். கிளி நொச்சி மாவட்டத்துக்கும் மட்டும் 65 இலட்சம் கொடுத்து உதவினோம். அபிநய ஆலய நாட்டியாலம் பள்ளி ஆசிரியை ரஜினி சத்திரூபன் அவர்களது மாணவிகள் நடனவிருந்து அளித்தார்கள்