- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்… !!” : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்
அனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, போலீசாரை மிரட்டி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கிவிட்டார். நவ.,20ம் தேதி திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதியை தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று (நவ.,22) அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7 மணிநேரத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கைதுக்கு பிறகு அவர் பேசியதாவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:
என்ன அடிப்படையில் என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். இது நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. மீனவர்கள் அழைத்ததால் தான் வந்தேன், மைக் பிடித்து பேச கூட இல்லை எனக்கூறினேன். அதற்கு, நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் சேர்கிறது என்பதால் போக முடியாது என்றனர். அப்போது கூட்டத்தினரை சமாதானம் செய்து வன்முறை வேண்டாம் எனக் கருதி கைது செய்யுமாறு கோரினேன்.
தூண்டிவிடுபவர் எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் அதை செய்பவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ். அவரது பெயரை எல்லாம் நாங்கள் (திமுக) ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா?. இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவல்துறை டிஜிபி.,யை மிரட்டும் தோனியில் உதயநிதி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கை காக்கும் காவல்துறை அதிகாரியை திமுக., மிரட்டுவது இது புதிதல்ல. கடந்த திமுக ஆட்சியின் போது இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஆனால் தற்போது ஆட்சியில் இல்லாதபோதும் மிரட்டல் போக்கை விடுவதாய் இல்லை.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத காவல் அதிகாரி கூறுகையில், ‛ஆட்சியில் இல்லாதபோதே திமுக.,வினர் போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால், போலீசாரின் நிலைமை என்ன ஆகும் என்பது இதிலிருந்தே தெரிகிறது,’ எனக் கூறினார்.