நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளிடையே செவ்வாயன்று நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது, இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும். இந்த வெற்றிக்கு, தமிழக வீரர் விஜய் சங்கரின் அபார பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்த வெற்றி மூலம் 500 போட்டிகளில் வென்ற இரண்டாவது அணி எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

  1. இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது இந்தியா. 1974ஆம் ஆண்டு, ஜூலை 13 தொடங்கி நேற்று வரை 963 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது.
  2. வெற்றிபெற்ற 500 போட்டிகளைத் தவிர, 414 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா. ஒன்பது போட்டிகளில் சாமனில் முடிவடைந்துள்ளன.
  3. இதற்கு முன் ஆஸ்திரேலியா மட்டுமே 500க்கும் மேலான ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. இதுவரை 923 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா, 558 போட்டிகளில் வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிபடத்தின் காப்புரிமைMICHAEL BRADLEY

4. 1975ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை தொடரில், ஸ்ரீனிவாச வெங்கடராகவன் தலைமையிலான இந்திய அணி கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வென்றது இந்திய அணியின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியாகும்.

5. 18 ஆண்டுகளுக்குப் பிறகு நூறாவது வெற்றியை 1993இல் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராகப் பதிவு செய்தது இந்தியா.

6. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி 100க்கும் மேலான ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக இலங்கை அணிக்கு எதிராக 158 போட்டிகளில் விளையாடியுள்ளது.