‘நமோ’ மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கலாம்!

‘பிரதமர் மோடியின் தனிப்பட்ட, ‘நமோ’ மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெறலாம்’ என, பா.ஜ., அறிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில், மீண்டும் வலுவான ஆட்சி அமைக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக,நமோ மொபைல் ஆப் மூலம், மோடியையும், பொதுமக்களையும் இணைக்கும் முயற்சி

மேற் கொள்ளப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் தனிப் பட்ட நமோ ஆப் மூலம், பொதுமக்கள் யார் வேண்டு மானாலும், கட்சிக்கு நன்கொடை வழங்கலாம்.

குறைந்தபட்சம், ரூ.5 ம், அதிக பட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ஏற்கப்படும். அப்படி நன்கொடை அளிக்கும் நபரின் மொபைல் எண்ணிற்கு, ஒரு, ‘ரெபரல் கோடு’ அனுப்பி வைக்கப்படும். அதை, அந்த நபர், தனக்கு தெரிந்த, 100 பேருக்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது இ – மெயில் அல்லது வாட்ஸ் ஆப் ஆகியவற்றின் மூலம் பகிரவேண்டும்.

அவர்களும், குறைந்த பட்ச தொகை அல்லது அதற்கு மேல் நன்கொடை செலுத்தி, ரெபரல் கோடு பெற்று, அதை பிறருக்கு அனுப்ப வேண்டும். இந்த சங்கிலி தொடர் வரிசையில், ஒருவர் அனுப்பிய ரெபரல் கோடை, 100 பேர் பகிர்ந்தால், அந்த நபர், மோடியை சந்திக்கும் வாய்ப்பை பெறும்

அதிர்ஷ்டசாலிகள் பட்டியலில் இடம் பெறுவார். அதே சமயம், ஒருவர் அனுப்பும் ரெபரல் கோடை, 10 பேர் பகிர்ந்தால், அந்த நபர், ‘டி- சர்ட்’ அல்லது காபி கோப்பையை இலவசமாக பெறலாம்.

இதன் மூலம், மோடிக்கும், மக்களுக்கும் இடை யிலான தொடர்பை வலுப்படுத்த முடியும். அதே நேரம், கட்சிக்கு நிதியும் கிடைக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.