- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

நடிகை போல் மாற நினைத்து 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சையால் அலங்கோலமான அழகி
ஹாலிவுட் நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்ணின் உண்மை முகம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஈரானின் தெகரான் பகுதியைச் சேர்ந்தவர் சகர் தபார் (22). ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான இவர், அவர் போல் மாற வேண்டும் என்று கூறி, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின.
ஏஞ்சலினா ஜோலி போல் மாற முயன்ற இந்த பெண் பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக, அதாவது பேய் போன்று இருப்பதாக இணையவாசிகள் எல்லாம் தெரிவித்து வந்தனர்.
அதில் பார்ப்பதற்கு அந்த பெண் மிகவும் அழகாக உள்ளார். தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது, இந்த பெண் தானா? இது என்றளவிற்கு மிகவும் அழகாக உள்ளார்.
புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் உள்ளனர். இவர் தன்னுடைய அழகிற்காக முகம், உதடு மற்றும் மூக்கு போன்றவைகளை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இவர் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது. அப்போது வெளியாகிய புகைப்படங்கள் சில மேக்கப் மற்றும் எடிட் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் இப்போது எடுக்கப்பட்டதா? அல்லது சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதா? என்பது குறித்து தெரியவில்லை.