நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்

திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்.

மே.வங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆளும் திரிணமுல் காங்கிரசில் இருந்து பல முக்கிய தலைவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோல்கட்டாவில் நடக்கும், பா.ஜ.,வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்ட மேடையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, மாநில தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது, பா.ஜ., பொது செயலர் கைலாஷ் விஜயவர்க்கியா, துணை தலைவர் முகுல் ராய், சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பா.ஜ.,வில் இணைந்த மிதுன் சக்ரவர்த்தி, திரிணமல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். பின்னர் அவர் ராஜினாமா செய்தார்.

பா.ஜ.,வில் இணைந்த பிறகு மிதுன் சக்ரவர்த்தி பேசுகையில், வங்காளி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏழைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். நாட்டிற்காக உழைக்க வேண்டும் என நோக்கம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.