நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் மீண்டும் வருமான வரிசோதனை

ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த் 7 ந்தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன்  வீடுகள்,  அலுவலகம், என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்கு பிறகு நடிகர் சரத்குமாருக்கு சம்மன் அனுப்பபட்டு இருந்தது.  சரத்குமாரிடம் வருமானவரி புலனாய்வு அலுவலகத்தில்  8 மணிநேரம் அதிகாரிகள் பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் இன்று சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவிற்கு சொந்தமான திநகரில் உள்ள  ராடன் மீடியா நிறுவனத்தில் இன்று வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதுபோல் சரத்குமாரின் சென்னை கொட்டிவாக்கம் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.புதிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.