நடிகர்கள் சங்க நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரவு – செலவு கணக்குகள் இணையதளத்தில் வெளியீடு

table

சென்னை
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி–சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர்,பொதுச்செயலாளர் விஷால்,துணைத்தலைவர்கள் பொன்வண்ணன்,கருணாஸ்,நடிகர் ராஜ்கிரண் மற்றும் மூத்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

பின்னர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது

நட்சத்திர கிரிக்கெட்டில் ரூ.6 கோடி ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். வரவு,செலவு அனைத்துக்கும் நாங்கள் முறையாக கணக்கு வைத்து இருக்கிறோம். நடிகர் சங்க நிலம் சார்ந்த அனைத்து வில்லங்கத்தையும் தீர்த்து இருக்கிறோம். கடன்களை அடைத்து இருக்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் எவ்வளவு வருமானம் வந்தது. எவ்வளவு செலவு ஆகி இருக்கிறது. வங்கி இருப்பில் எவ்வளவு தொகை இருக்கிறது உள்ளிட்ட கணக்கு விவரங்கள் அனைத்தையும் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி இன்று நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடுவார். நடிகர்களும் பொதுமக்களும் அதனை பார்க்கலாம்.என கூறி இருந்தார்.

அதன் படி நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரவு – செலவு கணக்குகள் இன்று நடிகர் சங்கத்தின் சமூக இணைய தளத்தில் வெளியிடபட்டு உள்ளது.