- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’: மன்மோகன் சிங் பற்றிய சினிமாவுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு ‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் சினிமாவாக வர உள்ளது. இதில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிகர் அனுபம்கெர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரதமர் பதவியை அவமதிப்பது போல் உள்ளதால், ‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் மற்றும் டிரைலருக்கு தடை கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் பூஜா மகாஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முரளிதர், சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘படத்திற்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர மனுதாரருக்கு உரிமை இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்’ என்று கூறி, படத்திற்கு தடை விதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.