- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு
டில்லியில் மாயமான குழந்தைகள் குறித்து டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், உங்களிடம் முக அடையாளங்கள் கண்டறியும் சாப்ட்வேர் இருந்தும் ஏன் இதுவரை மாயமான குழந்தைகளை கண்டறியவில்லை என டில்லி போலீஸ் கமிஷனருக்கு கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த டில்லி போலீஸ் கமிஷனர், முக அடையாளம் கண்டறியும் சாப்ட்வேர் உள்ளது. ஆனால் மாயமான குழந்தைகள் குறித்த புள்ளிவிபத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்க மறுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து புள்ளிவிபத்தை டில்லி போலீசிற்கு அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
கோர்ட் உத்தரவை ஏற்று, மாயமான 7 லட்சம் குழந்தைகளை பற்றிய புகைப்படத்துடனான புள்ளி விபரத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அளித்தது. இதைத் தொடர்ந்து முக அடையாளங்களை கண்டறியும் முறை (facial recognition system) என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி ஏப்.,6 முதல் 10 வரை 2930 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மாயமான குழந்தைகளில் 45,000 பேர் பல்வேறு குழந்தைகள் நல காப்பகங்களில் இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது. முக அடையாளங்களை கண்டறியும் முறையை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த விபரங்களை பிரமாண பத்திரமாக மத்திய அமைச்சகம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.