- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான பயங்கரவாதி அப்துல் சப்ஹான் குரோஷி டில்லியில் கைது
கடந்த 2008-ம் ஆண்டு குஜராத்தி்ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 56 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இதற்கு சதி திட்டம் தீட்டியவனும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மென்பொறியாளர் அப்துல் சப்ஹான் குரோஷி ,இவரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் டில்லி காஸிப்பூரில் பதுங்கியிருந்ததையறிந்த போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதில் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் குரோஹி கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சிமி, இந்தியான் முஜாகிதீன் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆவணங்கள் சிக்கின. கைதான குரோஷியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறித்து போலீஸ் கமிஷ்னர் பிரமோத் குஷ்வாகா கூறியது, குரோஷி கைது செய்யப்பட்டதன் மூலம் வரும் குடியரசு தினத்தன்று டில்லியில் மிகப்பெரிய தாக்குதல் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.