தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவான அலை: பிரதமர்

சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: 5 மாநில தேர்தல் அறிவித்த பிறகு, அசாம், மே.வங்கம், கேரளா, தமிழகம் மாநிலங்களுக்கு சென்ற நான், தற்போது புதுச்சேரி வந்துள்ளேன். இந்த 5 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான வீசுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்.கடந்த முறை புதுச்சேரி வந்த போது, ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புவதை புரிந்து கொண்டேன். பல ஆண்டுகளாக செயல்படாத காங்கிரஸ் அரசுகள் பட்டியலில் புதுச்சேரி அரசுக்கு முக்கிய பங்கு உள்ளது.

அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவியது. ஆட்சியில் வெறும் கொள்ளை தான் நடந்தது. யார் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அவர் ஓரங்கட்டுப்படுவார். முதல்வர் குடும்பத்திற்கு நேரடி தொடர்புடையவர் ஊழலில் ஈடபட்டார். இதனை காங்கிஸ் எம்எல்ஏ.,க்கள் நேரடியாக பேசுகின்றனர்.
துவரை சந்தித்த தேர்தல்களில் புதுச்சேரி தேர்தல் புதுமையானது. தலைவரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் பொய் கூறினார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு தரப்படவில்லை. கடந்த காலஆட்சி மோசமாக இருந்ததே இதற்கு காரணம். காங்கிரஸ், தன்னுடைய சாதனைகளை, செய்த பணிகளை கூட அளிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்போம். புதுச்சேரியில் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும். லஞ்சம் ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.