- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

தேமுதிக: அதிமுக கூட்டணியில் தான் இணைய வேண்டும்
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதாகவும், இனி, யாருக்கும் எங்கள் கூட்டணியில் இடம் இல்லை என்றும், நாங்கள் தேர்தல் பணிகளை துவக்கவுள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று அறிவாலயத்தில் வைகோவுடன் கூட்டணி பேச்சு முடிந்த பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில் : தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்துள்ளோம். அதன்படி காங்., 10 , மதிமுக 1 , மா.கம்யூ., இ.கம்யூ, விடுதலை சிறுத்கை கட்சிகள் தலா 2 தொகுதிகளும், கொ.ம.தே.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , ஐஜேகே கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி புதுச்சேரி உள்ளிட்ட மொத்தம் 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் கூட்டணியினருக்கும், திமுக வுக்கு 20 தொகுதிகளும் பகிரப்பட்டுள்ளன. திமுக தொகுதி உடன்பாடு முடிந்தது. நாளை விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பேரணி நடக்கிறது. யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து இரண்டு நாட்களில் முடிவாகும். மனித நேய மக்கள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் அறிக்கை அறிவிக்கப்படும். தமிழகத்தில் காங்., தலைவர் ராகுல் பங்கேற்கும் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் தனித்து நிற்கும் தேமுதிக , அதிமுக கூட்டணியில் தான் இணைய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.