தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்

தெலுங்கில் அறிமுகம் செய்த தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக இருக்கிறது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அது ஏன் என்று கீழே பார்க்கலாம்.   தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் தற்போது அஜித், விஜய் படங்களில் நடித்து  வருகிறார்.  காஜல் அகர்வால் 2007-ல் வெளியான தெலுங்கு ‘லட்சுமி கல்யாணம்’ படம் மூலம் தெலுங்கு பட உலகில் காலடி வைத்தார். இந்த  படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தவர் தெலுங்கு இயக்குனர் தேஜா.  காஜல் அடுத்து, ‘நேனே ராஜு நேனே மந்திரி’ படத்தில் ராணா ஜோடியாக நடிக்கிறார். இதை இயக்குபவர் தேஜா. 10  வருடங்களுக்குப் பிறகு இவருடைய இயக்கத்தில் காஜல்அகர்வால் நடிக்கிறார். இது குறித்து கூறிய அவர்….  “ நான் தெலுங்கு படத்தில் தேஜாவின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. படபடப்பாகவும்  இருக்கிறது” என்றார்.