தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ஜான் பால்டனுக்கும். அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில், ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது தனது டுவிட்டரில், “நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார். இதுவரை பால்டன் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவுக்கான புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment