- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்பு
தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்ட நிலையில் 8 ஆம் தேதி தமிழிசை பதவியேற்கிறார். முன்னதாக, டெல்லியில் உள்ள தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி, தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து நியமன ஆணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைவர் பதவியை கைப்பற்ற, அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக பா.ஜ.,வை, வடக்கு, தெற்கு என, இரு மண்டலமாக பிரித்து, புதிய தலைவர்களை நியமிக்கலாமா என, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதில், பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது, தமிழிசைக்கு கவர்னர் பதவி அளிக்கப்பட்டு உள்ளதால், தமிழக பா.ஜ.,வுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்து விட்டதால், மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் பார்வை, தற்போது, தமிழக பா.ஜ., தலைவர் மீது திரும்பியுள்ளது.
மேலும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கட்சியை புதிய பாதையில் திருப்பி விட வேண்டும் என்ற எண்ணமும், மேலிடத்திற்கு இருக்கிறது. எனவே, தமிழக பா.ஜ.,வை வடக்கு, தெற்கு என, இரண்டு மண்டலமாக பிரித்து, புதிய தலைவர்களை நியமிக்கலாமா என, ஆலோசிக்கப்படுகிறது. இல்லையேல், தமிழக காங்கிரஸ் பாணியில், ஐந்து மண்டலங்களாக பிரித்து, ஐந்து செயல் தலைவர்களை நியமிக்கலாமா என்பது குறித்தும், பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருகிறது.