தென் கொரியாவை தாக்க வடகொரியாவின் போர் ஒத்திகை! உஷார் நிலையில் ராணுவம்

இதுவரையில் வடகொரியா நான்கு முறை அணுகுண்டுசோதனைகளை நடத்தியுள்ளது. அதில் குறிப்பாக கடந்தஜனவரி மாதம் 6 ஆம் திகதி திடீரென அணுகுண்டை விடபல மடங்கு

சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவருகின்ற இந்த நாடு இவ்வாறான அணுகுண்டுசோதனைகளை நடத்தி வருகின்றமை பல நாடுகளின்மத்தியிலும் சந்தேகக்கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலை காரணமாக வடகொரியா மீது அமெரிக்காவும், பாதுகாப்பு கவுன்சிலும்கடுமையான பொருளதார தடைகளை விதித்துள்ள பட்சத்திலும் அந்த நாடு, தற்காப்புஎன்ற போர்வையில் தொடர்ந்து இவ்வாறான சோதனைகளை நடத்தி வருகிறது.

இதேவேளை தென்கொரிய அதிபரின் மாளிகையை அழிக்க வடகொரியா திட்டமிட்டுவருவதாகவும் அதற்காக பெரிய போர் ஒத்திகை ஒன்றினை நடத்தி வருவதாகவும்தகவல் கசிந்துள்ளன.

இந்த ஒத்திகையை தொலைநோக்கி வழியாக பார்த்து ரசித்த வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் மகிழ்ச்சி அடைந்ததக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நம்மை எதிர்த்து தாக்குதல் நடத்தும் திறன் தென்கொரியாவிடம் இல்லை. இதுபோக,நமது தாக்குதலில் தப்பிப் பிழைத்து ஒளியவும் அவர்களுக்கு வழியில்லை என கிம்ஜாங் உன் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

சில வேளைகளில் இந்த விடயம் உண்மையாகவும் இருக்கலாம் என சிந்திக்கும்வகையிலான செயற்பாடுகளில் வடகொரியா ஈடுபட்டு வருவதாகவே தோன்றுகிறது.

ஏனெனில் வடகொரியா இந்த ஆண்டில் இதுவரை கடந்த ஐந்து முறை அத்துமீறலாகஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ ஏவுகணை பரிசோதனைகளைதவறாமல் மேற்கொண்டு வருகிறது வடகொரியா. வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும்கடும் எதிர்ப்பினை வெளியிட்ட வண்ணமுள்ளன.

இதன் அடிப்படையில் வடகொரியா மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய தடைகளைவிதித்தது.

குறித்த ஏவுகணைகள் அனைத்தும் வடகொரியாவில் இருந்து சுமார் 3400 கிலொமீட்டர்தொலைவில் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ளஅமெரிக்க கடற்படை தளத்தை அழிக்கும ஆற்றல் படைத்தவையாககாணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹே நேற்று முன்தினம்பாராளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் பிரதமரானஹுவாங் கியோ ஆஹ்ன் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

வடகொரியாவால் விடுக்கப்பட்ட இந்த செய்தியின் பின் தென்கொரியாவின் தற்காலிகஅதிபர் தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அவசர கூட்டம் நடைபெற்றதுடன்வடகொரியாவின் ஒத்திகையானது, தாக்குதலாக மாறாமல் ஒத்திகையாகவேஇருக்கும் வகையில் ராணுவப்படைகளை விழிப்புடன் இருக்குமாறு தென்கொரியாஅரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.