- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரஜினிக்கு நேரில் ஆஜராக சம்மன் !!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு எதிர்த்து, தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், ‛தமிழகத்தில் இது போன்று போராட்டம் நடந்தால் நாடே சுடுகாடாகிவிடும். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம்,’ எனப் பேசியிருந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இதுவரை பலக்கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன. நடிகர் ரஜினிகாந்தையும் விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையம் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், விசாரணை ஆணையம் வரும் ஜன.,19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.