தூத்துக்குடி – திருச்செந்தூர் – நெல்லை இடையே மின்சார ரயில்: தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் – தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதில்,

# விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை

# பனைத் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு தனிசந்தை அமைத்து தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு

# தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகே அணை கட்ட நடவடிக்கை

# தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தாமிரபரணி வடிநிலக் கோட்டம் அமைக்க நடவடிக்கை

# மத்திய அரசின் மூலம் நிதி பெற்று பெரியதாழையில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்

# தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை

# திருச்செந்தூர் பாத யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைக்க நடவடிக்கை

# தூத்துக்குடி – திருச்செந்தூர் – நெல்லை இடையே மின்பாதை அமைத்து மின்சார ரயில் செல்ல நடவடிக்கை.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.